Friday, June 25, 2010

Tamil - A Classical Language


ஒரு மொழியை 'செம்மொழி' என்று வகைபடுத்துவதற்கு முன்பு 'செம்மொழி' என்றால் என்ன என்று தெறிந்திருக்க வேண்டும். 


சரி, செம்மொழி என்றால் என்ன ?
மொழியியலாளர் திரு. ஜார்ஜ் எல். ஹார்ட் (கலிஃபோர்னியா பல்கலை கழகம், பெர்க்கிலி) அவர்களின் கருத்துப்படி ஒரு மொழி செம்மொழி என்று வளங்கப்பட வேண்டுமெனில் அம்மொழியின் இலக்கியம் 

1) பழமையானதாய் இருக்க வேண்டும்.

2) மற்ற மொழிகளை சார்ந்து இல்லாமல், தனித்தன்மைகளுடன் மரபுவழிகளைக் கொண்டதாக இருக்க வேண்டும்.

3) படைப்புகள் வளம் மிகுந்ததாகவும் பழமையானதாகவும் இருக்க வேண்டும்.


தமிழ்மொழி செம்மொழியானது

ஒரு மொழியை செம்மொழி என்று வகுப்பதற்கான தகுதிகளைப் பார்த்தோம். இப்பொது நம் தமிழ்மொழி செம்மொழியா என்று பார்ப்பொம்.

ஆம், தமிழ் இலக்கியம் பழமையானதே. இன்று கிடைத்துள்ள மிகப் பழைய ஆக்கம் தொல்காப்பியம் ஆகும். இது பண்டைக்காலத் தமிழின் இலக்கணத்தை விளக்கும் ஒரு நூலாகும். 2005ல் அகழ்ந்தெடுக்கப்பட்ட சான்றுகள், கிமு 500ஆம் காலந்தொட்டே தமிழ்  மொழி எழுத்து வடிவம் பெற்று விளங்கியது என்பதற்கு ஆதாரமாய் இருக்கிறது.

மற்ற செம்மொழிகளை காட்டிலும் தமிழ் இலக்கியம் கருத்துகள் அதிகமுடையது. இருப்பினும் பிற செம்மொழிகளின் கலைப் படைப்புகளுக்குச் சிறப்பு வாய்ந்த கட்டிடக்கலைகள் சான்றாக இருக்கின்றன.

தமிழ்மொழி பழமையானது என்பதை எடுத்துக் கூறும் வகையில் அசோகத் தூண்கள் சான்றாக உள்ள்ன. அசோக தூண்களில் பாண்டிய, சேர, சோழ ராஜ்ஜியங்களைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. இத்தூண்கள் பொறிக்கப்பட்ட காலம் கி.மு. 273. இதன் மூலம் தமிழர்களின் வரலாறு மிகவும் பழமையானது என்பது மெய்ப்படுகிறது. மேலும் அறிஞர்கள் தமிழ் இன்னும் தொண்மையானதாக இருக்ககூடும் என்று கருதுகின்றார்கள்.

இந்தியாவில் 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்த தரையில் புதையுண்டு போன மொஹஞ்சாதாரா , ஹராப்பா கட்டிடக்கலைகள் இருக்கின்றன. இது திராவிடர் கட்டிடக் கலையா? அல்லது ஆரியர் கட்டிடக் கலையா? என்கிற கருத்து வேறுபாடு இன்னும் இருந்து வருகிறது. இதனால் சமஸ்கிருதம் மற்றும் தமிழ் மொழியின் பழமை அறிவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது என்கிறார்கள்.

கலைக்களஞ்சியம் பிரிட்டானிகா தமிழையும், சமஸ்கிருதத்தையும் (Vol.II.P.350) என்று குறிப்பிட்டிருந்தாலும் பன்னாட்டு நிறுவனமான யுனெஸ்கோ (கல்வி விஞ்ஞானம் நாகரீகம் சம்பந்தமான ஐக்கிய நாடுகள் அமைப்பு) தமிழையும், சம்ஸ்கிருதத்தையும் செம்மொழிகள் என ஒப்புதல் அளித்ததாகத் தெரியவில்லை.

தமிழை செம்மொழியாக்க திரு. ஜார்ஜ் எல். ஹார்ட் அவர்களின் அறிக்கை

இந்தியாவிலும் வெளி நாடுகளிலும் உள்ள பல தமிழ் அமைப்புக்களினதும், அறிஞர்களினதுமான நீண்ட கால முயற்சிகளைத் தொடர்ந்து. இந்திய அரசினால் தமிழ் ஒரு செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அங்கீகாரம் பெற்றுள்ள முதல் இந்திய மொழி தமிழாகும். இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டமொன்றின்போது, 2004 ஆம் ஆண்டு ஜூன் 6 ஆம் நாள் அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்களால் இவ்வறிவிப்பு வெளியிடப்பட்டது.


உலகச் செம்மொழிகள்

இன்று உலகில் செம்மொழிகளாகக் கருதப்படும் மொழிகள் 8 ஆக இருக்கின்றன. கீழெ தொகுத்துள்ள காலகட்டங்கள் எல்லாம் ஏறத்தாள புள்ளிவிபரங்களே. 

     இந்தோ-ஐரோப்பிய மொழிகள்:
          - கிரேக்க மொழி (கி.மு. 1500)
          - சமஸ்கிருதம் (கி.மு. 1500)
          - இலத்தீன் (கி.மு. 900)
          - பாரசீக மொழி (கி.மு. 600)

    ஆபிரிக்க-ஆசிய மொழிகள்:
          - அரபு மொழி (கி.மு. 350)
          - எபிரேயம் (கி.மு. 600)

    திராவிட மொழிகள்:
          - தமிழ் (கி.மு. 300)

    சீன-திபெத்திய மொழிகள்:
          - சீன மொழி (கி.மு. 3000)

" தமிழன் என்று சொல்லுடா
தலை நிமிர்ந்து நில்லுடா "

Wednesday, June 23, 2010

Ravanan - Usure Poguthey Song Lyrics (Tamil)


படம் : ராவனன்

பாடல் : உசிரெ போகுது

இசை அமைபாளர் : ரஹ்மான்

பாடல் ஆசிரியர் :  வைரமுத்து

பாடகர்கள் : கார்தித்க் & மொஹமெத் இர்பான்


பாடல் வரிகள்

இந்த பூமியில எப்ப வந்து நீ பொறந்த
என் புத்திக்குள்ள தீப்பொறிய நீ வெதச்ச
அடித் தேக்கு மரக் காடு பெருசுதான்
சின்னத் தீக்குச்சி ஒசரம் சிறுசுதான்

அடித் தேக்கு மரக் காடு பெருசுதான்
சின்னத் தீக்குச்சி ஒசரம் சிறுசுதான்
ஒரு தீக்குச்சி விழுந்து பிடிக்குத்தடி
கறுந் தேக்குமரக் காடு வெடிக்குத்தடி

உசிரே போகுது உசிரே போகுது
உதட்டை நீ கொஞ்சம் சுழிக்கையிலே
ஓ மாமன் தவிக்கிறேன் மடிப்பிச்சை கேட்கிறேன்
மனசைத் தாடி என் மணிக்குயிலே

அக்கறைச் சீமையில் நீ இருந்தும்
ஐவிரல் தீண்டிட நிணைக்குத்தடி
அக்னிப் பழமென்னு தெறிஞ்சிருந்தும்
அடிக்கடி நாக்குத் துடிக்குத்தடி

உடம்பும் மனசும் தூரம் தூரம்
ஒட்ட நினைக்க ஆகல
மனசு சொல்லும் நல்ல சொல்லை
மாய உடம்பு கேட்கல
தவியா.. தவிச்சு..
உசிருத் தடந்கெட்டுத் திரியுதடி

தையிலான் குருவி என்னை தள்ளி நின்னு சிரிக்குத்தடி
இந்த மம்முத கிறுக்கு தீருமா
அடி மந்திரிச்சு விட்ட கோழி மாறுமா
என் மயக்கத்தை தீத்து வெச்சு மன்னிச்சிடுமா..

சந்திரனும் சூரியனும் சுத்தி ஒரேக் கோட்டில் வருகுதே
சத்தியமும் பத்தியமும் இப்போ தலை சுத்தி கிடைக்குதே

உசிரே போகுது உசிரே போகுது
உதட்டை நீ கொஞ்சம் சுழிக்கையிலே
ஓ மாமன் தவிக்கிறேன் மடிப்பிச்சை கேட்கிறேன்
மனசைத் தாடி என் மணிக்குயிலே

அக்கறைச் சீமையில் நீ இருந்தும்
ஐவிரல் தீண்டிட நிணைக்குத்தடி
அக்னிப் பழமென்னுத் தெறிஞ்சிருந்தும்
அடிக்கடி நாக்குத் துடிக்குத்தடி

இந்த உலகத்தில் இது ஒன்னும் புதுசில்ல
ஒன்னு ரென்டு தப்பிப் போகும் ஒழுக்கத்திலே
விதி சொல்லி வழி போட்ட மனச்சுக்குள்ள
விதி விலக்கு இல்லாத விதியுமில்ல

எட்ட இருக்கும் சூரியன் பார்த்து மொட்டு விரிக்குது தாமரை
தொட்டு விடாத தூரம் இருந்தும் சொந்தபந்தமொ போகல
பாம்பா ..  விழுதா ..
ஒரு பாகுப்பாடு தெரியல்லையெ
பாம்பா இருந்தும் நெஞ்சு பயப்பட நினைக்கலையெ

என் கட்டையும் ஒரு நாள் சாயலாம்
என் கண்ணுள்ள உன் முகம் போகுமா
நான் மண்ணுகுள்ள உன் நினைப்பு மனசுக்குள்ள

சந்திரனும் சூரியனும் சுத்தி ஒரேக் கோட்டில் வருகுதே
சத்தியமும் பத்தியமும் இப்போ தலை சுத்தி கிடைக்குதே

உசிரே போகுது உசிரே போகுது
உதட்டை நீ கொஞ்சம் சுழிக்கையிலே
ஓ மாமன் தவிக்கிறேன் மடிப்பிச்சை கேட்கிறேன்
மனசைத் தாடி என் மணிக்குயிலே

அக்கறைச் சீமையில் நீ இருந்தும்
ஐவிரல் தீண்டிட நினைக்குத்தடி
அக்னிப் பழமென்னுத் தெறிஞ்சிருந்தும்
அடிக்கடி நாக்குத் துடிக்குத்தடி

உசிரே போகுது உசிரே போகுது
உதட்டை நீ கொஞ்சம் சுழிக்கையிலே
ஓ மாமன் தவிக்கிறேன் மடிப்பிச்சை கேட்கிறேன்
மனசைத் தாடி என் மணிக்குயிலே

அக்கறைச் சீமையில் நீ இருந்தும்
ஐவிரல் தீண்டிட நினைக்குத்தடி
அக்னிப் பழமென்னுத் தெறிஞ்சிருந்தும்
அடிக்கடி நாக்குத் துடிக்குத்தடி